மலை ரயிலுக்கு வயது 125!
நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு வயது 125, ரயில்வே நிர்வாகத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
ஆசியாவில் பல்சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயில் தான். நீலகிரி மலைரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 208 வலைவுகளின் வழியாக வளைந்து, நெலிந்து 16 குகைகளுக்குள் புகுந்து 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்கிறது. இந்த மலை ரயில் முதல் முறையாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட தினம் இன்று (ஜுன்-15).
கடந்த 1880-ம் குன்னூர் ரயில்வே கம்பெனி துவங்கப்பட்டு போதிய நிதி கிடைக்காததால் கைவிடப்பட்டது. 1890-ம் ஆண்டில் நீலகிரி மலை ரயில் கம்பெனி, பல்சக்கரங்களால் ஆன தண்டவாளம் அமைத்து குன்னூர் வரை அமைக்கப்பட்டு, நீராவி என்ஜின் மூலம் 1899-ம் ஆண்டு ஜுன் 15 -ம் தேதி தனது முதல் பயணத்தை துவங்கியது. மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது. இன்றுடன் தனது 125 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் மலை ரயில் மற்றும் குன்னூர் ரயில் நிலையம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் ரயில்வே நிர்வாகம் சார்பாக கேக் வெட்டி கொண்டாடினர். மலை ரயிலில் இன்று பயணித்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.