எம்.பி தற்கொலை முயற்சி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-24 12:28 GMT
எம்பி தற்கொலை முயற்சி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கணேசமூர்த்தி. இவர் இன்று தனது வீட்டில் மயக்க நிலையில் ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பெரியார் நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து சல்பாஸ் என்ற மாத்திரையை முழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு செயற்கை சுவாச உதவியுடன் கொண்டு செல்லப்பட்டார். 1989 மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராகவும் , 1998 பழநி நாடாளுமன்ற உறுப்பினராகவும் , 2009 , 2016 என 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் கணேசமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.