எம்பி,எம்எல்ஏ சிறப்பு மாஜிஸ்திரேட் -தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டு மூன்று ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து தமிழக தலைமை செயலாளர், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-02-24 19:13 GMT
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டு 3 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அமைக்காமல் உள்ளது குறித்து தமிழக தலைமை செயலாளரும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரும் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கின் விசாரணையை மார்ச் 5 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.