வேதாரண்யம் அருகே வாலிபர் கொலை: மூன்று பேர் மீது வழக்கு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாலிபர் கொலை மூன்று பேர் மீது வழக்குஒருவரை காவல் துறையினர் விருத்தி சென்ற போது கீழே விழுந்து கால் முறிவு இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளர்.

Update: 2024-03-11 09:22 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையசரகத்திற்குட்பட்ட தேத்தாகுடி வடக்கு, பூவையர் பூமி பெண்கள் தையலகம் பகுதியில் அடையாலம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டுகிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் குற்ற சம்பவயிடத்திற்கு விரைந்த வேதாரண்யம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேற்படி அடையாலம் காணப்பட்டு, இறந்தவரின் மனைவியான சுபா வேதாரணியம் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் காவல் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரனையில் இறந்தவர் வேதாரணியம் கருப்பம் புலம் சிவாஜி மகன் சிவராஜா என்பவர் என்பதும் அவருடைய உரவிணரான அதே ஊரை சேர்ந்த முருகானந்தம்

ஆகிய இருவருக்கும் இடையே செத்து பிரச்சனை இருந்து வந்ததும் தெரியவந்தது. இறந்த நபரான சிவராஜா என்பவர் 07.03.2024 ஆம் தேதியன்று வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வேதாரண்யம் சரகம் மாவடிவாய்க்கால் அருகில் காலை 07.30 மணிக்கு TN 51 AH 7382 என்ற இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது TN 49 AF 1635 Ambassador என்ற நான்கு சக்கரவாகனத்தால்

மேற்படி இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தவரை கருப்பம்புலம் முருகானந்தம் சேலம் சின்ன திருப்தி தீனதயாளன் மற்றும், நாகப்பட்டினம் அருள்பிரகாசம் ஆகிய முன்று நபர்கள் மற்றும் சிலர் இறந்த சிவராஜாவை அரிவாளால் கழுத்து மற்றும் கையில் வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்படி தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தீனதயாளன மீது 4 கொலை வழக்குகள் 16 வழிபறி வழக்குகளும், மற்றும் அருள்பிரகாசம் என்பவர் மீது கொலை, கொலை முயற்ச்சி,ஆயுத வழக்கு, வழிபறி என 8 வழக்குகளும் இருப்பது தெறியவந்தது

மேலும் வழக்கு சம்பந்தமாக முருகானந்தம் என்பவர் திருவாருர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும், வழக்கில் தேடப்பட்டு வந்த எதிரிகளான தீனதயாளன் மற்றும் அருள்பிரகாசம் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர்களை தனிப்படை காவல் துறையினர் விரட்டி பிடிக்கையில் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உடனே அவர்களை மீட்ட காவல்துறையினர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் தற்சமயம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி, இவ்வழக்கில் வேறு யாரேனும் குற்றவாளிகள் உள்ளனரா என்று தீவிர தேடுதல் வேட்டையில் நாகை மாவட்ட தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News