மருத்துவர் கொலை - மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பு ஒத்திவைப்பு

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Update: 2024-04-03 05:49 GMT

சென்னை உயர் நீதிமன்றம் 

நிலப் பிரச்னை காரணமாக மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்கள் வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

மரண தண்டனை, ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், நம்ப தகுந்த சாட்சிகள் முறையாக காவல்துறை தரப்பில் நிரூபிக்கவில்லை. விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளமால் தண்டனை விதித்துள்ளது எனவே ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு தண்டனை விதித்துள்ளது எனவே தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறை தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News