நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை - மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்ப்பு

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Update: 2024-06-14 07:13 GMT

நரம்பியல் மருத்துவர் சுப்பையா 

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. நிலப்பிரச்சனை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஏழு பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கபட உள்ளது.
Tags:    

Similar News