திருத்தணியில் என் மண், என்மக்கள் யாத்திரை .  

திருத்தணியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில்   பா.ஜ.க  மாநில தலைவர்  அண்ணாமலை  பங்கேற்றார்.

Update: 2024-02-08 16:44 GMT

யாத்திரையில் கலந்து கொண்ட அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எண் மண், எண் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டில்  189 தொகுதிகளில் மேற்கொண்டு  190வது தொகுதியாக  திருத்தணியில் இன்று  நடைபெற்றது.

அண்ணாமலையை வரவேற்கும் வகையில் அக் கட்சியினர்  அரக்கோணம் சாலை, மா.பொ.சி சாலைப் பகுதிகளில்  பேனர்கள், கொடி கம்பங்கள், வாழை தோரணங்கள்  கரகாட்டம்,  மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்கால் குதியை, கேரள சண்டி மேளம், பம்பை உடுக்கை மேள தாளங்கள் உட்பட பல்வேறு வேடங்களில் கலைஞர்கள்  அண்ணாமலைக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. 

மதியம் 12 மணிக்கு திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும்  மலையடிவாரத்திலிருந்து தொடங்கிய அண்ணாமலை  பாதயாத்திரை  தொடங்கினார். அவருக்கு  பா.ஜ.க வினர்  முருகன் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்ட  வெள்ளி வேல் காணிக்கை  வழங்கப்பட்டது.  ஏராளமான பா.ஜ.க வினர் மத்தியில் அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், மா.பொ.சி சாலையில்  பாதயாத்திரை நடைபெற்றது.

அப்போது சாலைக்கு இருபுறமும் பொதுமக்கள்  கூடி நின்றி  மலர்தூவி உற்சாக வரவேற்பு வழங்கினர்.    பிரச்சார வாகனத்திலிருந்து அண்ணாமலை  பேசுகையில். ராமநாதபுரத்தில்  தொடங்கப்பட்ட எண் மண் எண் மக்கள் யாத்திரை  மக்கள் யாத்திரையாக  மாறி பா.ஜ.க செல்வாக்கு வெகுவாக அதிகரித்து வருகின்றது.. வரும் நடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி  மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி என்றும்,

தமிழ்நாட்டில்  திராவிட கட்சிகள் ஜாதி அரசியல், குடும்ப அரசியல்,  ஊழல், அடாவடி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றது. அந்த 4 அழுக்குகள்  அகற்ற  மக்கள்  முன் வரவேண்டும்.  அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெகத்ரட்சகன்  திமுக வை பொறுத்தவரை  முழுக்குடம் மக்களுக்கு அவர் குறைக்குடம்,

  திமுக வின் ரிசர்வ் வங்கியாக செயல்படும் ஜெகத்ரட்சகன் மக்களுக்கு தேவைகள் அடிப்படை  தேவைகள் நிறைவேற்றுவதில்  ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News