மை வி3 ஏட்ஸ் நிறுவன உரிமையாளரிடம் குற்றபிரிவு போலீசார் விசாரணை!
விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்த நிலையில் மை வி3 ஏட்ஸ் நிறுவன உரிமையாளரிடம் கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.;
Update: 2024-02-06 05:12 GMT
சக்தி ஆனந்த்
கோவை:விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி செய்ததாகவும் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்ததாக மை வி3 ஏட்ஸ் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகுமாறு மை வி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்திற்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.இந்நிலையில் விசாரணைக்கு தனது வழகறிஞர்களுடன் சக்தி ஆனந்தனன் பிற்பகல் ஆஜரானார்.அவரிடம் கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் தொடர்ந்து விசா்ணை நடத்தி வருகின்றனர். பிற்பகல் ஒரு மணிக்கு துவங்கிய விசாரணை 4 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து வருகின்றது. அவரிடம் பணபரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.