கல்லூரிக்கு நாக் அங்கீகாரம்

விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரிக்கு உயர்தர அங்கீகாரத்தை நாக் கமிட்டி வழங்கியுள்ளது.

Update: 2024-04-22 15:52 GMT

விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரிக்கு உயர்தர அங்கீகாரத்தை நாக் கமிட்டி வழங்கியுள்ளது.


விருதுநகரில் வே.வ.வன்னியப்பெருமான் கல்லூரி கடத்த 62 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இக் கல்லூரியில் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதியப் பாடப்பிரிவுகளான டேட்டா சயின்ஸ் உயிர்நுட்பவியல் ஆகியவை பயிற்று விக்கப்படுகின்றது மேலும் இக் கல்லூரியில் மாணவிகள் படிக்கும் பொழுதே கூடுதலாக ஒரு பட்டத்தையும் பயில் ஏதுவாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது பெங்களூர் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த மார்ச் 18.19ஆம் தேதி வரை விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியின் கட்டமைப்புகள் ஆய்வகங்கள் கற்றல் வசதிகள் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி மற்றும் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர் மேலும் மாணவிகள் பேராசிரியைகள் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவிகளுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தனர் அதன்படி நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் ( நாக்) வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரிக்கு ஏ பிளஸ் பிளஸ் (A++) என்ற உயர் தர அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இது பற்றி கல்லூரிச் செயலாளர் பி.சி.எஸ்.கோவிந்தராஜபெருமாள் செய்தியாளர்களிடம் கூறுகையில் 1962 -ல் தொடங்கப்பட்ட இக் கல்லூரி விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மகளிர் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது இக் கல்லூரியில் 22 இளநிலை மற்றும் 15 முதுநிலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன இக் கல்லூரியில் ஆங்கிலம் வரலாறு வணிகவியல் கணிதம் உயிர்வேதியியல் மற்றும் தமிழ் ஆகிய துறைகள் ஆராய்ச்சி மையங்களாக செயல்பட்டு வருகின்றன 2009 -ஆம் ஆண்டில் தன்னாட்சி உரிமம் பெற்றது 2004 -ஆம் ஆண்டில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் ஆய்வில் 'ஏ' அந்தஸ்து பெற்றது 2010 -ஆம் ஆண்டு இரண்டாவது சுழற்சியிலும் மற்றும் 2018 -ஆம் ஆண்டு மூன்றாவது சுழற்சியிலும் தொடர்ந்து 'ஏ' அந்தஸ்தைத் தக்கவைத்துள்ளது தற்போது நான்காவது சுழற்சியில் 'ஏ + +,என்ற உயர்தர அங்கீகாரத்தை வழங்கியுள்ளது இக் கல்லூரியில் போதுமான கட்டமைப்பு கணினி ஆய்வகங்கள் விளையாட்டு அரங்கம் கேண்டீன் ஆடிட்டோரியம் ஆகியவை சிறப்பாக உள்ளது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு ஆராயச்சித் திட்டங்கள் புது கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகள் கிராமங்களை தத்தெடுத்தல் அறிவியல் தொழில்நுட்பத்துக்கான தனித்துவ பங்களிப்பு அதிநவீன ஆய்வகங்களின் செயல்பாடு மாணலிகளின் தேர்ச்சி விகிதம் ஆசிரியர்களின் கல்வித் தகுதி பணி அனுபவம் கல்லூரி விதிமுறைகள் தரமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச பத்திரிகைகளில் வெளியீடு போன்ற அம்சங்கள் மிகச் சிறப்பாக உள்ளதாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் தெரிவித்துள்ளது எனக் கூறினார்.

விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி ஏ பிளஸ் பிளஸ் உயர்தர அங்கீகாரம் பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரி முதல்வர் சு.மா.மீனா ராணி கல்லூரி அகத் தரமதிப்பீடு உறுதிமைய ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சிந்தனா மற்றும் ஆர். பரணி துறைத்தலைவர்கள் டீன்கள் பேராசிரியைகள் ஆசியரல்லாத பணியாளர்கள் முன்னாள் மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களை கல்லூரி புரவலர் V.V .V .A.மகேந்திரன் தலைவர் T.பழனிச்சாமி உபதலைவர் S.சிவபால ஈஸ்வரி சந்தோஷ்குமார் செயலாளர் P.C.S கோவிந்தராஜபெருமாள் கூட்டுச்செயலாளர் G.லதா மற்றும் பொருளாளர் K.ரவிசங்கர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News