நாகை எம்.பி செல்வராஜ் மறைவு - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இரங்கல்
நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Update: 2024-05-14 02:28 GMT
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியுமான திரு.எம்.செல்வராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி..!