நாகை நாடாளுமன்ற உறுப்பினர் மறைவு - தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல்
நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவிற்கு தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Update: 2024-05-14 02:20 GMT
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில். நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர், செல்வராஜ், மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நான்கு முறை நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்டா பகுதி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் .அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்.