முருகன் இலங்கை தூதரகம் செல்ல அனுமதி கோரி நளினி வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி தனது கணவர் நேர்காணலுக்காக இலங்கை தூதரகம் செல்ல அனுமதி வழங்கு வழக்கு போட்டுள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-08 12:02 GMT
பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலுக்கு இலங்கை தூதரகம் சென்று வர தனது கணவர் முருகனுக்கு அனுமதி வழங்க கோரி நளினி வழக்கு போட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட முருகன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நிலையில் ஜனவரி 30ஆம் தேதி நேர்காணலுக்கு அழைத்து வரப்படவில்லை என நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கனவே ஒரு மாதத்தில் 2 பேர் இறந்துள்ளனர் என்று நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.