நாமக்கல் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுககு மேற்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு
நாமக்கல்லில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மாவட்ட எல்லையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்செங்கோடு வருகை தந்தார். அப்போது நாமக்கல் மாவட்ட எல்லையான பால்மடை பகுதியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பிலும் ஒன்றிய திமுக மற்றும் மகளிர் அணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு 60அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டதிமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு நகர திமுக சார்பில் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நகர திமுக சார்பில் 60 அடி உயரத்தில் வரவேற்பு பலூன் பறக்க விடப்பட்டது. இதில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு உதயநிதி ஸ்டாலினுக்கு வீர வெள்ளிவாள் கொடுத்து வரவேற்பு அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்டதிமுக செயலாளர் மதுரா செந்தில்,ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல்,நகர் செயலாளர் கார்த்திகேயன்,ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல்,மாநில சமூக வலைதள அணி பொறுப்பாளர் ஒன்றிய குழு கவுன்சிலர் திருநங்கை ரியா,நகர மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.