போதைப் பொருள் : அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - வெற்றிமாறன்
போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.;
Update: 2024-05-06 08:02 GMT
இயக்குனர் வெற்றிமாறன்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நம்முடைய வாழ்க்கை நம் கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். எந்த விதமான அடிமையாக்குதலும் நல்லது கிடையாது. அப்படி ஒரு பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தால் அதை கடந்து வருவதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும். போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.