தேசிய மறுசுழற்சி தினம் மற்றும் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தேசிய மறுசுழற்சி தினம் மற்றும் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்

Update: 2023-12-03 03:07 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் தேசிய மறுசுழற்சி தினம் மற்றும் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மறுசுழற்சி பொருட்களை வீடுதோறும் சேகரிக்கும் நிகழ்ச்சியும் ஆட்டையாம்பட்டி பகுதியில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் ஆட்டையாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், இதுகுறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்களை சேகரித்து அதனை பயனுள்ள பொருட்களாக மாற்றி கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்கலைக்கழக மாணவ நல மேம்பாட்டு இயக்குனர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சுழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர் ரஞ்சிதா மற்றும் உறுப்பினர் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News