அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய கருத்தரங்கு

மாணவர்களுக்கு பல போட்டிகள் நடைபெற்றது

Update: 2023-12-04 06:39 GMT

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய கருத்தரங்கு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை அறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், பாண்டிச்சேரி அறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் கதிரியக்கவியல் பிரிவின் மூலம் தேசிய கருத்தரங்கு நடந்தது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்திய கதிரியக்கவியலாளர் சங்க நிறுவன தலைவர் முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சங்க பொது செயலாளர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார். சென்னை காமாட்சி மருத்துவமனை இயற்பியல் பிரிவின் தலைவர் தயாளன், ஐதராபாத் நிஷாம் மருத்துவ அறிவியல் கல்லூரியின் தாமோதர நாயுடு, மணிபால் மருத்துவகல்லூரி கதிரியக்கவியல் துறை இணை பேராசிரியர் சாய்கிரண், விம்ஸ் மருத்துவமனையின் துணை மருத்துவ இயக்குனர் அசோக், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் மூத்த கதிரியக்கவியலாளர் முருகேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

இந்திய கதிரியக்கவியலாளர்கள் சங்க மூத்த நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசலு பங்கேற்று சிறப்பித்தார். நிகழ்ச்சியில் கல்வியியல் மற்றும் திறன், வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்காக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, இந்திய கதிரியக்கவியலாளர்கள் சங்கமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், தொழில்நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டு வினா-விடை, படவிளக்க காட்சி, ஆராய்ச்சி கட்டுரை விவரித்தல் போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் கதிரியக்கவியல் பிரிவின் பொறுப்பாளர் கலைவாணி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன், ஜஸ்வந்தினி, ஷகினா, கார்த்திக் ராஜா, சித்ரா, அல்போன்ஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News