புஞ்சைபுளியம்பட்டி அருகே நவகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

புஞ்சைபுளியம்பட்டி அருகே நவகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி எடுத்து ஊர்வலம் நடந்தது.;

Update: 2024-05-02 06:22 GMT

புஞ்சைபுளியம்பட்டி அருகே நவகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி எடுத்து ஊர்வலம் நடந்தது.


புஞ்சைப் புளியம்பட்டி அருகே அனையப்பன் பாளையம் பிரிவு பகுதியில் பிரசித்தி பெற்ற நவகாளியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த 25ஆம் தேதி கணபதி யாகத்துடன் தொடங்கியது. பின்னர் மாலை 6 மணிக்கு கம்பம் நடப்பட்டது.

இது தொடர்ந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர் மேலும் தினமும் இரவு கம்பத்தை சுற்றி பக்தர்கள் ஆடி வந்தனர் நேற்று காலை காரப்படி ஆதிபராசக்தி கோவிலிலிருந்து பக்தர்கள் தீர்த்த குடம் கரகம் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக நவகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர் இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

Tags:    

Similar News