நயினார் நாகேந்திரன் வழக்கு - அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி
திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
Update: 2024-04-25 02:15 GMT
நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தொடர்ந்த வழக்கில், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச்சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது என்று அமலாகத்துறை தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.