நயினார் நாகேந்திரன் உதவியாளரிடமிருந்து 4 கோடி பறிமுதல் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-04-19 05:43 GMT
நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News