விக்கிரவாண்டியில் வெற்றி கணக்கு துவக்கம் - டிடிவி தினகரன் நம்பிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி கணக்கை தொடங்கிடும் தேர்தலாக அமையட்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Update: 2024-06-17 05:51 GMT
அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி கணக்கை தொடங்கிடும் தேர்தலாக அமையட்டும். தடைகளையும் எதிர்ப்புகளையும் பணிவுடன் எதிர்கொண்டு தீவிர தேர்தல் களப்பணியாற்ற அன்பு வேண்டுகோள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.