நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் - மு.க.ஸ்டாலின் அழைப்பு !

Update: 2024-06-07 07:31 GMT

மு.க.ஸ்டாலின் 

நடந்து முடிந்த நீட் தேர்வு பற்றி எழுந்துள்ள புகார்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் மட்டும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் போன்ற குழப்பங்களே ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளுக்கு வெட்டவெளிச்சம் என்றும் நீட் தேர்வை திமுக ஏன் எதிர்க்கிறது என்பதற்கு தற்போதைய குளறுபடிகளே சாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ஏழைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த அவர்,  நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News