தேமுதிக உடன் கூட்டணி உறுதி என்பதால் தான் பேச்சுவார்த்தை நடக்குது
கூட்டணி உறுதி என்பதால் தான் பேச்சுவார்த்தை நடக்கிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
Update: 2024-03-01 17:36 GMT
அதிமுக, தேமுக இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி தங்கமணி அன்பழகன் பெஞ்சமின் ஆகியோர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சாலிகிராமத்தில் உள்ள அவரது உள்ளத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிமுக தேமுதிக கூட்டணி உறுதி என்பதால் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்... இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடரும்..