புதிய அங்கன்வாடி கட்டிடம் - எம்.எல்.ஏக்கள் துவக்கி வைப்பு
சேலம் அருகே பி.நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் ஆரம்ப கல்வி வழங்க அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 25 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து அங்குள்ள தனியார் வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அங்கு போதிய இடவசதி இல்லாததால் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 13½ லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
ஓமலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகுமரன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர்கள் அழகிரி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், குப்புசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒன்றிய துணைச்செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் மனோஜ் குமார், தங்கராஜ், தியாகராஜன், சசிகுமார், தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டன