தபால் வாக்கு செலுத்தும் முறையில் புதிய மாற்றங்கள் - சத்யபிரத சாகு
தபால் வாக்கு செலுத்தும் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.
Update: 2024-03-22 05:47 GMT
தபால் வாக்குகளை செலுத்தி வரும் அரசு ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், உள்ளிட்ட சில தகுதி உள்ள ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை தபாலில் அனுப்ப முடியாது மாற்றாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிக்கும் தேதிகளில் அதற்கான மையங்களில் வைக்கப்பட்ட பெட்டிகளில் அந்த வாக்குகளை செலுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.