ஆண்டிமடத்தில் லயன் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு
ஆண்டிமடத்தில் லயன் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பின் போது பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெல்மெட்கள் வழங்கப்பட்டன
ஆண்டிமடம் லயன்ஸ் சங்கம் மற்றும் ஆண்டிமடம் சூப்பர் ஷைன் லயன்ஸ் சங்கம் 2024-2025 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆண்டிமடம் லயன்ஸ் சங்கதலைவர் தில்லைநாயகம் மற்றும் ஆண்டிமடம் சூப்பர் ஷைன் சங்க தலைவர் அருள்மேரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர் வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி ரீடுசெல்வம் பன்னாட்டு லயன்ஸ் சங்க விரிவாக்கம் மாவட்ட தலைவர் ரீடுசெல்வம் அனைவரையும் வரவேற்று புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தும் ஆண்கள், பெண்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஹெல்மெட்டும் வழங்கி அரிசி மூட்டைகள். புடவைகள் மரக்கன்றுகள் உள்ளிட்ட சேவை திட்டங்களை வழங்கி துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட அவைச்செயலாளர் அசோகன், மாவட்ட அவைப் பொருளாளர் கணேசன் மண்டல தலைவர் செந்தில்குமார். பெண்கள் மேம்பாட்டு மாவட்டத் தலைவர் .பத்மாவதி. வட்டாரத்தலைவர் சண்முகம் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சுற்று வட்டார லயன்ஸ் சங்க முக்கிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆண்டிமடம் லயன்ஸ் சங்க தலைவராக ரகுபதி செயலாளராக சீனிவாசன். பொருளாளராக கார்த்திக் ராஜா. ஆண்டிமடம் சூப்பர் ஷைன் லயன்ஸ் சங்க தலைவராக நிர்மலாமேரி, செயலாளராக அவிலா தெரசாள். பொருளாளராக அருள்மேரி ஆகியோர் 2024-2025 ஆண்டின் நிர்வாகிகளாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். பொறியாளர் தனசேகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆண்டிமடம் லயன்ஸ் சங்க செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.