வடசென்னையில் 2.20 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு திடல் திறப்பு.
வடசென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 12:57 GMT
எம்பி
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி புதிய நவீன தரைதளத்துடன் விளையாட்டு திடலை திறந்து வைத்தார். மகாகவி பாரதியார் நகர் மத்திய அவென்யூ சாலையில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.20 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மரத்தினால் ஆன தரைத்தளம் , நடைபாதை, வெளிப்புற உடற்பயிற்சி உபகரணம் மற்றும் இறகு பந்து விளையாட்டு அரங்கம் அடங்கிய விளையாட்டு திடலை திறந்து வைத்தார்.
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.