இளையான்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

இளையான்குடியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-02 07:59 GMT

விஷ்ணு பிரதாப் 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பகைவரை வென்றான் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறையின் மாவட்ட செயலாளரான    என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இவர் தென்னகம் என்னும் youtube சேனல் நடத்தி வருகிறார் . சுமார் ஆறு அதிகாரிகள் காலை ஐந்து மணி முதலாகவே சோதனையிட்டு வரும் நிலையில் , தற்பொழுது நாம் தமிழர் கட்சியின் இளையான்குடி தொகுதி செயலாளர் ஆனந்தன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள ஈழத் தமிழர்களுடன் விஷ்ணு பிரதாப் என்பவர் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அவரிடம் உள்ள ஐபோன் ஒன்றையும் பிரபாகரன் நாவல் புத்தகத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News