நீலகிரி : சினிமா படப்பிடிப்புக்கு இனி தடை இல்லை!

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீஸன் நிறைவடைந்ததை முன்னிட்டு அரசுத் தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளது.;

Update: 2024-07-02 05:23 GMT
நீலகிரி : சினிமா படப்பிடிப்புக்கு இனி தடை இல்லை!

பைல் படம் 

  • whatsapp icon
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி என அனைத்து காண்காட்சிகளும் நடந்து முடிந்தது. கோடை சீஸனை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தலங்களிலும் கண்காட்சி பணிகள் நடைபெற்றதால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டாகலை துறை தடைவிதித்து இருந்தது. இந்நிலையில் கோடை சீசன் நிறைவடைந்ததால் படப்பிடிப்பிற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்புற்க்கு அனுமதி தேவைப்படுபவர்கள் தோட்டக்கலை அலுவலகத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News