NMMS தேர்வு முடிவுகள் பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் வெளியீடு

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

Update: 2024-02-28 01:06 GMT

NMMS தேர்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS EXAMINATION) கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் 2,25,490 மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இத்தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. எனவே இத்தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Results என்ற தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு (NMMS EXAMINATION)- முடிவுகள் பிப்ரவரி -2024 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலும் National Means Cum Merit Scholarship Scheme Examination என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News