கட்டாய ஓய்வு வழங்கக்கூடாது - ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை
கட்டாய ஓய்வு வழங்கக்கூடாது என பேரூராட்சி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை;
By : King 24x7 Website
Update: 2023-12-18 08:53 GMT
கட்டாய ஓய்வு வழங்கக்கூடாது என பேரூராட்சி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை
சேலத்தில், தமிழ்நாடு பேரூராட்சி ஓய்வு பெற்ற அலுவலர் சங்க, 5வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் சடையப்பன் தலைமை வகித்தார். மாநில செயலர் பெரியசாமி, செயல் அறிக்கை தாக்கல் செய்து பேசுகையில், பாதிக்கப்பட்ட அலுவலர்கள் மீதான விசாரணையை துரிதமாக முடித்து தீர்வு காண வேண்டும். சிறு குற்றங்களை காரணம் காட்டி, அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கக்கூடாது, என்றார். தொடர்ந்து, மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 'சஸ்பெண்ட்' அலுவலர்களுக்கு மாத இறுதி நாளில் வழங்கும் பிழைப்பூதியம், ஓய்வூதிய சலுகைகள் குறித்த உத்தரவை உடனே வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.