எந்த அமைச்சரும் தனது சொந்த பணத்தை செலவிடவில்லை: நடிகை கஸ்தூரி

மத்திய மாநில அமைச்சர்கள் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் தரம் தாழ்ந்து பேசுவது வேதனையளிக்கிறது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-28 12:07 GMT

நடிகை கஸ்தூரி

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் சமூக செயற்பாட்டாளர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னையில் 2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறினார்கள்.

தற்போது ரூ.4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் அமைத்தும் வெள்ள பாதிப்புகள் அதிகம். இந்த முறை அதிக அளவில் தன்னார்வலர்கள் உதவி செய்யவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் விஜய் ஆகியோர் எதுவும் பேசவில்லை.

சூர்யா,கார்த்தி உள்ளிட்ட சில நடிகர்கள் நிதி வழங்கினர். அமைச்சர்கள் தங்கள் சொந்த பணத்தை எத்தனை பேர் கொடுத்தார்கள். எம்.பி. கனிமொழி தனது வீட்டில் சமைத்து உணவு வழங்கியதோடு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இதுவரை பதவிக்கே வராத ஒரு கட்சி செய்த உதவிகளை கூட யாரும் செய்யவில்லை. அரசியலுக்கு வருவதாக கூறி ரஜினி ஏமாற்றிவிட்டார். உடல்நிலை சரியில்லை என்று கூறுகிறார். அவரைவிட உடல்நலம் குன்றியவர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.

மழைவெள்ள பாதிப்பிற்கு கூட ரஜினி குரல் கொடுக்கவில்லை. அவரது படம் ரிலீசானால்தான் குரல் கொடுப்பார். மழைவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு கட்சிபார்த்து செய்ய சொன்னதாகவும், பலர் வெளியில் தெரியாமல் செய்ததாக இரண்டு விதமாக கூறப்படுகிறது.

சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் குறைந்த அளவில் உதவி செய்துள்ளார்களா என்று தெரியவில்லை என்றார்.

Tags:    

Similar News