வேட்பு மனு நிராகரிப்பு வழக்கு - உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து.

வேட்பு மனு நிராகரிப்பில் சட்டவிரோத நிராகரிப்பை காரணம் காட்டி வழக்கு தொடர்ந்தால், தேர்தலையே ரத்து செய்ய கோரலாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2024-04-17 08:05 GMT

பைல் படம் 

வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள் முன்மொழிந்துள்ளதாக கூறி, வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து வழக்கில், வாக்குப்பதிவை தவிர பிற தேர்தல் நடைமுறைகள் முடிந்து விட்டதால் நிவாரணம் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. சட்டவிரோத நிராகரிப்பை காரணம் காட்டி தேர்தல் வழக்கு தொடர்ந்தால், தேர்தலையே ரத்து செய்ய கோரலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News