வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபும் மனோ மனுத் தாக்கல்

அதிமுக வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ மனுத்தாக்கல் செய்தார்.;

Update: 2024-03-25 15:31 GMT

கோப்பு படம் 

வடசென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள ராயபுரம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை வடக்கு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள்.

வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், அதிமுக சார்பில் வட சென்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட ராயபுரம் மனோ இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு, முன்னாள் அமைச்சர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் உள்ளிட்டோர் வந்தனர்.

Tags:    

Similar News