அயோக்கியா பட்டினம் அருகே வடமாநில வாலிபர் விபத்தில் பலி
அயோக்கியா பட்டினம் அருகே வடமாநில வாலிபர் விபத்தில் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 14:43 GMT
கோப்பு படம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்கைலாஷ் தேவ் (29). இவர் அயோத்தியாப்பட்டணம் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு பாஸ்ட்புட் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அம்மாப்பேட்டையில் இருந்து அயோத்தியாபட்டணம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் பின்னால் சென்ற அரசு பஸ்சுக்குள் விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மே
லும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.