ஒரு வாக்காளர் கூட வாக்களிக்காமல் இருக்க கூடாது - சத்ய பிரதா சாகு.

ஒரு வாக்காளர் கூட வாக்களிக்காமல் இருக்க கூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம், தேர்தல் பறக்கும் படை பாரபட்சமின்றி சோதனைகள் மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

Update: 2024-03-28 02:58 GMT

சத்ய பிரதா சாகு 

நாடாளுமன்ற தேர்தல் 2024 புத்தக வெளியீட்டு விழாவில், பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தேர்தல் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மூலமாக வெளியாகிறது. அதனால் ஊடகங்கள் செய்திகள் ஆராய்ந்து வெளியிட வேண்டும் ஒரு வாக்காளர் கூட வாக்களிக்காமல் இருக்க கூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம். தேர்தல் பறக்கும் படையினரால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வாகனங்களையும் சோதனை செய்யப்படுகிறது. தேர்தல் பறக்கும் படை பாரபட்சமின்றி சோதனைகள் மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜி.பி. எஸ் மூலமாக தேர்தல் பறக்கும்படை வாகனங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஒரு தொகுதிக்கு 7 கண்காணிப்பு வாகனங்கள் கொடுத்துள்ளோம்.
Tags:    

Similar News