புழல் பெண்கள் சிறையில் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் மனநல பெண் ஆலோசகர் காலியாக உள்ள பணியிடத்திற்கு வேண்டிய தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-03-02 01:26 GMT

பைல் படம்

புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு மனநல பெண் ஆலோசகருக்கான காலியாக உள்ள பணியிடத்திற்கு என்னென்ன தகுதிகள் தேவை என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. சைக்காலஜி அல்லது சோசியாலஜி படிப்பில் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்க வேண்டும், பொது வகுப்பினருக்கு இந்த இட ஒதுக்கீடு என்றும், 2023 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அன்று குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும், குறிப்பாக எஸ் சி ஏ, எஸ் சி, எஸ் டி பிரிவினருக்கு அச்சபட்ச 35 வயதும், பி சி, எம் பி சி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 என்றும், ஓசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Council experience in mental health institutions or community service அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் விகிதத்தில் தகுதியுள்ள வகுப்பினர் மார்ச் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை , முன் அனுபவ சான்று, உள்ளிட்டவற்றை இணைத்து சிறை கண்காணிப்பாளர் பெண்கள் தனிச்சிறை புலன் சென்னை 66 என்று முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News