விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் நாதக!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
விக்ரவாண்டி தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8.2% வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரத்து 485 வாக்குகளை பெற்றது நாம் தமிழர் கட்சி.
இதனையடுத்து தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் இலக்காக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியினர், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.