மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நூதன போராட்டம்

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-05 15:29 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆட்டோ தொழிலையும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி கந்தம்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு உயர்த்தப்பட்ட வாகன வரியை ரத்து செய்ய வேண்டும், கொடுமையான ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், 2019 மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி ஆட்டோகளுக்கு மீட்டர் பொருத்தி கட்டணம் இணைய வழி ஆஃப் (App)உடனே அமல் படுத்த வேண்டும். வீடு இல்லாத மோட்டார் தொழிலாளர்களுக்கு வீடு அல்லது வீட்டு மனை வழங்க வேண்டும் என கையில் சட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News