விசிக பிரமுகர் ஆக்கிரமிப்பு - கடையை மீட்டு தரக்கோரி மூதாட்டி மனு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆக்கிரமித்துள்ள கடையை மீட்டு தரக்கோரி மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

Update: 2023-12-12 08:59 GMT

வைஜெயந்தி மாலா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி திருவள்ளுவர் நகரில் வசிக்கும் வைஜெயந்தி மாலா என்ற 74 வயது மூதாட்டிக்கு சொந்தமான கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆக்கிரமித்ததை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

ஆரணி நகரம் கோட்டை மேற்கு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வைஜெயந்தி மாலா என்பவருக்கு சொந்தமான 3 கடைகள் உள்ளன, கணவர் மார்க்கபந்து கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார், இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார், எனது கணவர் மரணத்துக்கு பிறகு வாடகை கொடுக்கவில்லை, வாடகை பணம் கொடுக்குமாறு நானும், எனது மகனும் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை,

மேலும் கடையின் சுவற்றை இடித்து 2 கடையுடன் இணைத்து கொண்டு உள்பக்கம் பூட்டி உள்ளார், இதனால் சின்னக்கண்ணு என்பவருக்கு நாங்கள் விற்பனை செய்த கடை 1-ம் எண் கடையை திரும்ப ஒப்படைத்துவிட்டார். மேலும் அவர் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். இடிக்கப்பட்ட சுவரை சரி செய்ய முயன்றபோது அங்கு வந்த ஆரணி நகர காவல்துறையினர், கடையை மூடி சாவியை எடுத்து சென்றுவிட்டனர். கடையை காலி செய்ய முடியாது என விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டல் விடுக்கின்றனர். கடை உள்ளே செல்லமாட்டோம் என கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி கொண்டனர். எனக்கு சொந்தமான 1-ம் எண் கடை சாவியை காவல் நிலையத்தில் இருந்து பெற்று கொடுத்தும், 2-ம் எண் கடையில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியினரை வெளியேற்றி மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News