ஒடுகத்தூர் : சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!

ஒடுகத்தூர் அருகே 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-04-25 08:03 GMT
பைல் படம்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் திருமணம் நடத்தி வைக்கப் போவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி, சம்பந்தபட்ட கிராமத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 16 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றமாகும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சிறுமிக்கு திருமணம் செய்துவைக்க மாட்டோம் என அவர்களிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டனர்.பின்னர், சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News