''நிச்சயமாக சொல்கிறேன்! ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்தான்'' - தமிழிசை சௌந்தரராஜன்
நிச்சயமாக சொல்கிறேன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இந்துத்துவா தலைவர்தான் என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா.
அவர் தற்போது இருந்திருந்தால் ராமர் கோயில் சென்று ராமரை கும்பிட்டு விட்டு, இந்தியாவின் 100 ஆண்டு கனவு நிறைவேறியது என்ற ஒரு கருத்தைச் சொல்லி இருப்பார்