சட்டவிரோதமாக பான்மசாலா விற்பனை- கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
உணவு பாதுகபபுதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர்;
Update: 2023-12-03 03:04 GMT
சட்டவிரோதமாக பான்மசாலா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதாவது, சேலம் டவுன், கன்னங்குறிச்சி, பள்ளப்பட்டி, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 84 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 22 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 6 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.