ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கும் கட்டிடங்கள்

Update: 2024-08-02 08:40 GMT

ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் நீரில் மூழ்கிய நிலையில் வீடுகளுக்குள் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

ஆற்றின் கரையோரங்களிலும், நீரோடைப் பகுதிகளிலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், வீடுகள் என பிரம்மாண்ட கட்டிடங்கள் சுமார் 5 முதல் 10 அடி வரை நீரில் மூழ்கியுள்ளன.  

Tags:    

Similar News