ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி - போலீசார் விசாரணை
மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-17 08:53 GMT
ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. மேலும் இறந்த மூதாட்டி யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.