சிஎம்டிஏ சார்பில் ஆலந்தூர் சமூக நலக்கூட பணி தொடக்கம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை ஆலந்தூர் சமூக நலக்கூட பணியை 18.64 கோடி மதிப்பில் அமைச்சர் அன்பரசன் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 09:48 GMT
பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்ட சென்னை ஆலந்தூர் புதிய சமுதாய நலக்கூடம் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்று, பணி தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி 12வது மண்டலக் குழுத்தலைவர் என்.சந்திரன், சி.எம்.டி.ஏ., கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார், முதுநிலை திட்ட அமைப்பாளர் அனுஷியா, மாமன்ற உறுப்பினர் பிருந்தாஸ்ரீ, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குணாலன், நடராஜன், ஜெகதீசன், முரளிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.