சாராயம் விற்பனையில் ஒருவர் கைது - 120 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் !
ஒடுகத்தூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து 120 லிட்டர் கள்ள சாராயம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 05:30 GMT
ஒருவர் கைது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அரிமலை உள்ளிட்ட பகுதிகளில் வேப்பங்குப்பம் காவல் நிலைய ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அரிமலை மலையடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற போலீசார் கள்ள சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பீஞ்சமந்தை அடுத்த பெரிய பணப்பாறை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 34) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 120 லிட்டர் கள்ளச் சாரத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்.