கனமழை அறிவிப்பால் பயணத்தை தவிர்த்த மக்கள்; சென்னையில் 50% ஆம்னி பஸ்கள் இயக்கம்!!

கனமழை அறிவிப்பால் மக்கள் தங்களது பயணத்தை தவிர்த்ததால் சென்னையில் 50 சதவீத ஆம்னி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

Update: 2024-10-16 08:18 GMT

Special Buses

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்றும் இன்றும் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்து. அரசு பஸ்கள் குறைந்த அளவிலான பயணிகளுடன் சென்றது. வார இறுதி நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) இல்லாத பிற நாட்களில் 800 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இக்கப்பட்டன. ஆம்னி பஸ்களை பொறுத்தவரையில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாக சென்னையில் இருந்து 800 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும். ஆனால் பயணிகள் இல்லாததால் 350 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார். அதே போல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு நேற்று குறைந்த அளவில்தான் ஆம்னி பஸ்கள் வந்தன. வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும். நேற்று 200 பஸ்கள் மட்டுமே வந்தன. சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர். பலர் முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்தனர். அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News