மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே நிதி ஒதுக்கீடு! அதிர்ச்சி தகவல்!!

Update: 2024-08-15 12:30 GMT
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே நிதி ஒதுக்கீடு! அதிர்ச்சி தகவல்!!

ரயில் 

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது

காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை - மாமல்லபுரம் - கடலூர் இடையே 179 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க வெறும் .1,000 ஒதுக்கப்பட்டுள்ளது

திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்துக்கு வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது

ஈரோடு - பழனி 91 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டத்துக்கு வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது

தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதால் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம் நிதி குறைப்பு வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கப்படுவதாக எழுந்த புகார் ஓய்வதற்குள் பிற ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி குறைத்தது வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News