ஊட்டி மலை ரயில் சேவை 3-வது நாளாக ரத்து

Update: 2023-11-07 06:47 GMT

தண்டவாளத்தில் விழுந்து கிடக்கும் பாறைகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மலை ரயில் சேவை இயங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இந்த மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கல்லாறு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்தது. இதில் தண்டவாளம் சேதம் அடைந்ததால் அதனை சரி செய்யும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுப்பட்டு வந்தது. இதனால் ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பணி நடைப்பெற்று வருகிறது.இதனால் மூன்றாவது நாளாக ஊட்டி -மேட்டுப்பாளையம் இடையிலான  மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News