புகழ் பெற்ற ஊட்டி குதிரை பந்தயம் : சீரிப்பாய்ந்த குதிரைகள்
ஊட்டியில் புகழ்பெற்ற டெர்பி பந்தயத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடைபெறும். கோடைவிழாவின் அங்கமாக மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 14-ம் தேதி (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 137-வது குதிரை பந்தயம் ஊட்டியில் கடந்த 6-ம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் போட்டிகள் தொடங்கிய நிலையில் புகழ்பெற்ற 1000 கின்னிஸ், 2000 கின்னீஸ் பந்தயம் முடிந்துவிட்டன.
மிக முக்கிய போட்டியான டெர்பி குதிரை பந்தயம் இன்று நடைபெற்றது. மொத்தம் நடந்த 7 போட்டிகளில் 45-வதாகஸஇந்த பந்தயம் நடைபெற்றது. மொத்தம் 11 குதிரைகள் கலந்து கொண்டன. 3 வயதுக்கு உட்பட்ட குதிரைகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. 1600 மீட்டர் தூரத்தை 1.49 நிமிடங்களில் ஓடி ராயல் டிபெண்டர் குதிரை வெற்றி பெற்றது. இதன் பயிற்சியாளர் செபாஸ்டியன், ஜாக்கி சாய் குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குதிரையின் உரிமையாளருக்கு ரூ.46 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் திஸ் இஸ் கோல்ட் குதிரை இரண்டாவது இடத்தையும், கிரே விண்ட் குதிரை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
இரண்டாவது இடம் பிடித்த குதிரைக்கு 17 லட்சம் மூன்றாவது இடம் பிடித்த குதிரைக்கு 7 லட்சம் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது. போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதேபோல் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டு உற்சாகமூட்டினார். ஊட்டியில் குதிரை பந்தயம் ஜூன் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும்.